இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வோருக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியாவில் இருந்து செல்வோருக்கான கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு இன்று முதல் ஓரளவு தளர்த்தியுள்ளது. பிரிட்டன் நலவாழ்வுத் துறை, இந்தியாவைச் சிவப்புப் பட்டியலில் இருந்து அம்பர் எனப்படும் பொன் நிறப் பட்டியலுக்கு மாற்றியுள்ளது.
சிவப்புப் பட்டியலில் இருந்தபோது இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வோர் அங்கு 10 நாட்கள் விடுதியில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவானது.
அம்பர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் இந்தக் கட்டுப்பாடு இன்றுமுதல் தளர்த்தப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அல்லது ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டிருந்தால் வீட்டுத் தனிமையில் இருந்தும் விலக்களிக்கப்படும்.
Comments