இரு தவணைகளில் வெவ்வேறு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு சிறப்பான எதிர்ப்பாற்றல் -ஆய்வில் தகவல்

0 4448

ரண்டு தவணைகளில் வெவ்வேறு வகை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சிறப்பாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரு வகையான தடுப்பு மருந்து செலுத்தியவர்களுக்கு அதன் செயல் திறன் பற்றி ஆய்வை நடத்தும்படி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர் குழு பரிந்துரைத்தது.

உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் 19 பேருக்கு முதல் தவணையில் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது தவணையில் தவறுதலாக கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது.

அவர்களின் நோய் எதிர்ப்பாற்றல் குறித்துப் புனேயின் தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வு செய்ததில் ஒரே வகை தடுப்பூசியைப் போட்டவர்களைவிட, எதிர்ப்பாற்றல் சிறப்பாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments