தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

0 3586

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

1984 முதல் 1990ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த திண்டிவனம் ராமமூர்த்தி, சென்னையை அடுத்த பனையூரிலுள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.  இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.

திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு நேரில் சென்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments