சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தப்படி, பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்று, ரயில்வே நிர்வாகமும் 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்தை மாற்ற ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.
இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக, 2 கோடியே 30 லட்சம் அளவிலான எரிபொருள் செலவுகள் குறைக்க வாய்ப்பு உள்ளது.
Comments