ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம் நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆக்சிஜன் பிரிவு மட்டும் செயல்பட்டு வந்த நிலையில் ஜூலை மாதத்தோடு அதற்கு கொடுத்த காலக்கெடு முடிவடைந்தது.
இதனையடுத்து ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் வரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
Comments