சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து யுஏஇக்கு எத்திஹாட் நிறுவனம் விமான சேவை

0 3023

சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எத்திஹாட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியா தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் தளர்த்தியுள்ளதால் சென்னை, கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் டெல்லி உள்ளிட்ட ஏழு நகரங்களிலிருந்து விமான சேவையைத் தொடங்குவதாக எத்திஹாட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தச் சேவைகள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பயணிகள் பயணப்படும் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்று பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அபுதாபிக்கு பயணிகள் வந்தவுடன், அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments