புல்லட் வாகனத்தில் தம்பதியர் சர்ச்சை பயணம் - சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகும் வீடியோ

0 5878

பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படும் தம்பதியர் ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தில் சென்ற போது மோசமான நடத்தைக்காக உள்ளூர் மக்களால் கண்டிக்கப்பட்ட வீடியோ, கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களிலும், இணையவெளியிலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த புல்லட் வண்டியினை கணவன் ஓட்ட மனைவி பின்புறம் அமர்வதற்கு பதிலாக பெட்ரோல் டேங்கில் அமர்ந்துள்ளார். கணவரின் முகம் பார்த்தவாறு பயணித்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களின் செய்கையை வீடியோவில் பதிவு செய்தது மட்டுமின்றி அந்த வண்டியை தடுத்து நிறுத்தி, இவ்வாறு பயணிப்பது ஆபத்தை தருவிக்கும் என அறிவுரையையும் வழங்கி உள்ளனர்.

இருப்பினும், எப்போது, எந்த இடத்தில் வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments