போட்டோ ஸ்டூடியோவில் சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீத கொடுமை..!

0 6168

ஸ்டுடியோவுக்கு போட்டோ எடுக்க சென்ற சட்டக்கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை போட்டோ எடுத்து வைத்து மிரட்டிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்த பரத்லால் என்கிற லால்சரண், சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவரது ஸ்டூடியோவுக்கு சட்டக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மாணவியை வரவேற்று குளிர்பானம் கொடுத்த லால்சரண், அதில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அவர் மயங்கியதும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, மாணவியின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டி மீண்டும் மீண்டும் மானவியை ஸ்டூடியோவுக்கு அழைத்து பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தனது தாயாரிடம் கதறி அழுத நிலையில் வெளியில் தெரிந்தால் தனது மகளின் மானம் போய்விடுமே என்று அஞ்சி, போட்டோ ஸ்டியோ சென்று லால்சரணிடம், தனது மகளின் புகைப்படங்களையும் வீடியோவையும் கொடுத்துவிடும்படி கெஞ்சியுள்ளனர். இருவரையும் ஆபாசமாகப் பேசி லால்சரண் விரட்டியதாக கூறப்படுகின்றது.

இதனால் வேறு வழியின்றி தாயும் மகளுமாய் காவல் நிலையம் சென்று அவன் மீது புகாரளித்துள்ளனர். விசாரணையில் தனது ஸ்டியோவுக்கு வரும் அழகான பெண்களிடம் அவர்களை யூடியூப்பில் ஷார்ட் பிலிம் எடுக்க உள்ளேன், அதில் நடிக்கையாக்குகிறேன் என்று கூறி விதவிதமாக போட்டோ எடுப்பது லால்சரணின் வழக்கம் என்று கூறப்படுகிறது. அவனது பேச்சில் மயங்கும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, சட்டக்கல்லூரி மாணவியை சீரழித்த பாணியிலேயே அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் சிலர் புகார்கள் உள்ளதாக தெரிவித்த போலீசார், லால்சரண் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவனை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தங்களை ஆபாசமாகப் புகைப்படமோ, வீடியோவோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டும் நபர்கள் மீது புகாரளிக்க தைரியமாக பெண்கள் முன்வர வேண்டும் எனக் கூறும் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், அப்படியே சமூக வலைதலங்களில் பதிவேற்றினாலும் 24 மணி நேரத்தில் போட்டோவையோ, வீடியோவையோ அழித்துவிடலாம் என்கிறார்.

ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாக கூறி யாராவது மிரட்டினால் இனி அச்சப்பட வேண்டியது அவன் தானே தவிர ஏமாற்றப்பட்ட பெண்கள் அல்ல என்று அறிவுறுத்தும் காவல்துறையினர் துணிந்து புகார் அளியுங்கள் தக்க நடவடிக்கை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்களை ஏமாற்றிய புகாருக்குள்ளான பரத்லால் என்கிற லால்சரண், பாஜக நகர இளைஞரணி பொதுச்செயலாளர் எனக்கூறி, பிளக்ஸ் பேனர்கள் வைத்து ஃபேமசான நபர் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments