நூற்றாண்டு பழமை வாய்ந்த வின்டேஜ் கேமரா வடிவில் நடமாடும் கார் ; ஃப்ரீகேட் நிறுவனம் அசத்தல்
நூற்றாண்டு பழமை வாய்ந்த வின்டேஜ் கேமராவை மையமாக வைத்து, நடமாடும் வண்டி ஒன்றை திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள கேமிரா அருங்காட்சியம் ஒன்று கொடுத்த ஆர்டரின் பேரில், தொழிலகங்கள், சினிமா, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிநவீன கருவிகளை உருவாக்கித் தரும் திருச்சியின் ஃப்ரீகேட் என்ற பொறியியல் நிறுவனம், உலகின் முதல் ரெட்டை லென்ஸ் பெல்லோஸ் கேமரா வடிவம் கொண்ட காரை வடிவமைத்துள்ளது.
4.65 லட்சம் ரூபாய் செலவில், சுமார் 3 மாதங்களில் இந்த கார் உருவக்கப்பட்டுள்ளது. Camera on wheels என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஃப்ரீகேட் நிறுவனத்தின் தலைவர் தமிழினியன், விஜய் நடித்த நண்பன் படத்தின் கிளைமாக்ஸ்-ல் இடம்பெரும் சாதனங்கள் தன் கைவண்ணத்தில் உருவானதாக கூறுகிறார்.
Comments