பிச்சை எடுக்க வைப்பதற்காக 4 மாத ஆண் குழந்தையைக் கடத்திய பெண் கைது

0 3365
பிச்சை எடுக்க வைப்பதற்காக 4 மாத ஆண் குழந்தையைக் கடத்திய பெண் கைது

திருப்பதியில் பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தப்பட்ட 4 மாத ஆண் குழந்தையை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். 2 நாட்களுக்கு முன் அலிபிரி பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது 4 மாத ஆண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்த தம்பதி, போலீசில் புகாரளித்தனர். பிச்சைக்காரர் ஒருவர் கொடுத்த தகவலில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில் அப்பெண் மைசூருவைச் சேர்ந்த ஆஷா என்பது தெரியவந்தது. உடனடியாக மைசூரு விரைந்த போலீசார், அங்கு குழந்தையை விற்கத் தயாராக இருந்த ஆஷாவை மடக்கிக் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments