மல்யுத்தத்தில் மேலும் ஒரு பதக்கம்..! வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா

0 7553

லிம்பிக் மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

மூன்றாமிடத்துக்கான போட்டியில் பஜ்ரங் புனியாவும், கசக்கஸ்தான் வீரரும் மோதினர். முதல் பாதியில் இரண்டுக்குப் பூச்சியம் என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்ற பஜ்ரங் புனியா இடைவேளைக்குப் பிறகும், பலமான தாக்குதல் உத்திகளை கையாண்டு எட்டுக்குப் பூச்சியம் என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. மல்யுத்த நாயகன் பஜ்ரங் புனியாவுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments