அயர்லாந்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகில் ஏறிய வால்ரஸ்
அயர்லாந்தின் தெற்கு கடற்கரையில் வால்ரஸ் ஒன்று மிகவும் சிரமப்பட்டு ரப்பர் படகில் ஏறும் வீடியோ வெளிடப்பட்டுள்ளது. இந்த வால்ரஸ், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் கடற்பகுதிக்குள் பல மாதங்களாக அலைந்து திரிந்துள்ளது.
இந்நிலையில், ஆர்ட்மோர் விரிகுடாவில் தனியாக தத்தளித்து கொண்டிருந்த வால்ரஸ், கரையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரப்பர் படகில் ஏறிக்கொண்டது. பாலூட்டி வகையை சேர்ந்த இந்த விலங்குகள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் துருவ பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.
Comments