குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் மனுத்தாக்கல்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளான். டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் இளைஞர்கள், சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசிக்கொண்டே பப்ஜி விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் என்கிற மதன்குமார் கைது செய்யப்பட்டான்.
அவன் மீது ஏராளமான புகார்கள் குவியத் தொடங்கியதால் சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ள மதன், தனது செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளான். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
Comments