நாளை மற்றும் 11 ஆகிய தேதிகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை - தமிழக அரசு
தமிழகத்தில் நாளை மற்றும் 11 ஆகிய தேதிகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆடி அமாவாசை நாளான 8 ஆம் தேதியும், ஆடி பூரமான 11 ஆம் தேதியும், கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கொரோனா முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிக்கையில் கூறியுள்ளது. அதேசமயம் ஆக விதிப்படி பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments