ஆன்லைன் வகுப்புகளால் கற்றல் - கற்பித்தல் இடைவெளி அதிகரிப்பு... பள்ளி கல்வித்துறை
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொடர் ஆன்லைன் வகுப்புகளால் கற்றல் குறைபாடு இருப்பது தெறியவந்துள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதை நிவர்த்தி செய்ய, மாணவர்களுக்கு மாதந்தோறும் கட்டாய அசைன்மென்ட் (assignment) வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பினருக்கு, Greeting Card தயாரித்தல், படம் வரைதல் போன்றவையும், 6 முதல் 8-ஆம் வகுப்பினருக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு போன்றவையும், 9 மற்றும் 10-ஆம் வகுப்பினருக்கு புத்தக விமர்சனம் போன்ற Assignment-களும் தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments