அசல் எல்லைக் கோடு அருகே கோக்ரா மலைகளில் இருந்து சீனப்படைகள் வாபஸ்
இந்தியா -சீனா ராணுவத் தளபதிகளின் 12வது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அசல் எல்லைக் கோடு அருகே உள்ள கோக்ரா மலைச்சிகரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருநாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இந்திய சீன வீரர்கள் நேருக்கு நேர் மோதக் கூடிய வகையில் மிக அருகாமையில் முகாம்கள் அமைத்திருந்த மலைச்சிகரங்கள் இப்போது படைகள் இல்லாத நிலையை அடைந்துள்ளன.
சீனப்படையினர் தங்கள் கூடாரங்களை காலி செய்து ஊர் திரும்புகின்றனர். ஆனால் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டெப்சாங் பகுதியில் சீனப்படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை
Comments