ரூ.6.39 கோடி செல்போன்கள் கொள்ளை.. விசாரணையில் இறங்கியுள்ள தனிப்படை

0 3934
ஓசூர் அருகே கர்நாடக மாநிலப் பகுதியில் கண்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தாக்கி 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓசூர் அருகே கர்நாடக மாநிலப் பகுதியில் கண்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தாக்கி 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் பகுதியிலுள்ள ஒரு செல்போன் கம்பெனியிலிருந்து கண்டெய்னர் லாரியில் 6 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் வியாழக்கிழமை இரவு பெங்களுருவுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த கண்டெய்னர் லாரியை ஒட்டுநர் சுரேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். 

கண்டெய்னர் லாரி தமிழகத்தை கடந்து கர்நாடகா மாநிலம் கோலார் முளுபாகல் சாலையில் தேவராயசமுத்ரா என்ற இடத்தில் சென்றபோது கார் ஒன்றில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் லாரியை வழிமறித்துள்ளது.

ஒட்டுநர் சுரேஷைத் தாக்கி லாரிக்குள் போட்டு அந்த கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளனர். நீண்ட தூரம் சென்ற பின்னர் ஓரிடத்தில் லாரியை நிறுத்தி விட்டு ஒட்டுநர் சுரேஷின் கை கால்களை கட்டிய கொள்ளையர்கள், அவரை அங்கிருந்த புதருக்குள் வீசிவிட்டு லாரிக்குள் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் அனைத்தையும் தாங்கள் கொண்டு வந்த மற்றொரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

விடிய விடிய புதருக்குள் மயங்கிக் கிடந்த ஒட்டுநர் சுரேஷை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டுள்ளனர். சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து செல்போன் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே பாணியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments