ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் - அன்புமணி இராமதாஸ்

0 3033
ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்

ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பா.ம.க. சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம், ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள், இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப் படவோ தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments