இந்தியா - சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு ; கிழக்கு லடாக்கில் கோக்ரா பகுதியில் இருந்து படைகள் விலக்கம்
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் இருந்து படைகளை விலக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த 31 ஆம் தேதி நடத்திய 12வது கட்டப் பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு இருதரப்பு மோதல் ஏற்பட்ட பின், கோக்ரா பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் மொத்தம் 6 இடங்களில் இருந்து படைகளை விலக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 4 இடங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. டெப்சங், ஹாட் ஸ்ரிங்ஸ் ஆகிய இடங்களில் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments