சம்பங்கி செடிகளுக்கு ஸ்பிரிங்லர் முறையில் நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் - விவசாயிகள்

0 2431
சம்பங்கி செடிகளுக்கு ஸ்பிரிங்லர் முறையில் நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், சம்பங்கி செடிகளுக்கு ஸ்பிரிங்லர் முறையில் தண்ணீர் பாய்ச்சுவதால், பாதி அளவு மட்டுமே தண்ணீர் தேவைப்படுவதுடன், நீரை சேமிக்க முடியுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், அய்யன்சாலை உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி, சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஸ்பிரிங்லர் முறையில், நீர் பாய்ச்சுவதால் சம்பங்கி செடியில், நோய் தாக்குதல் குறைவதோடு, மழைப்போல் நீர் தெளிப்பதால், தண்ணீர் நிலத்தில் சொட்டு சொட்டாக விழுந்து செடியின் வேர் வரை சென்று, நன்கு வளர்ந்து அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments