வறுமையை போக்க குருவிக் கூடு தயாரித்து, விற்பனை செய்து வரும் மாணவிகள்..
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வறுமையை போக்க 3 மாணவிகள் குருவிக் கூடு தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர்.
மோர் பாளையம் கிராமத்தை சேர்ந்த மில் தொழிலாளி தீபாவின் இரு மகள்களான நந்திதா, சௌபர்ணிகா மற்றும் இவரின் அக்கா மகள் சௌமியா ஆகிய மூவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்கி படித்து வந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், வீட்டிற்கு வந்த இவர்கள், தேங்காய் நார், நூலை பயன்படுத்தி குருவி கூடு தயாரித்து வைத்தபோது, அதில், குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது.
இதனால் கூடு தயாரித்து, விற்பனை செய்த நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்ததால், விதவிதமாக தயாரிப்பதுடன், ஒரு கூடு 80 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
Comments