அச்சுறுத்தல் பற்றிப் புகார் அளித்தால் சிபிஐ நடவடிக்கை எடுப்பதில்லை - தலைமை நீதிபதி ரமணா
அச்சுறுத்தல் பற்றி நீதிபதிகள் புகார் அளித்தால் சிபிஐயும் மற்ற புலனாய்வு அமைப்புகளும் உதவுவதில்லை என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
நிழல் உலக தாதாக்கள் தொடர்பான வழக்குகளில் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பிக்காத நீதிபதிகள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறுகளைப் பரப்பி அவர்களை மனத்தளவில் துன்புறுத்தும் போக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். அச்சுறுத்தல் பற்றி நீதிபதிகள் சிபிஐயிடமோ, உளவுத்துறையிடமோ தெரிவித்தால் அவை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.
சிபிஐ தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்தார். நீதிபதிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இவ்வாறு கருத்துத் தெரிவித்த அவர், இது குறித்து ஒருவாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
Comments