வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாக தொடர்ந்து நீடிக்கும் -ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும், வங்கிகளின் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாகவும் தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி, அறிவித்துள்ளது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் எந்த மாற்றமும் இன்றித் தொடர்ந்து ஏழாவது முறையாக அதே விகிதத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
2021 - 2022 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 புள்ளி 5 விழுக்காடாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments