ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு ரூ.4கோடி ஊக்கத்தொகை - ஹரியானா அரசு
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு, 4கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஹரியானாவைச் சேர்ந்த ரவிக்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், ரவிக்குமார் தாஹியாவை பெருமைப்படுத்தும் விதமாக அவரது சொந்த கிராமமான Nahari-யில் நவீன வசதிகளுடன் கூடிய மல்யுத்த போட்டிக்கான உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டேரியா அறிவித்துள்ளார். அத்தோடு, ரவிக்குமாருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments