ராஜ்குந்த்ரா மீதான ஆபாச பட வழக்கு நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு மும்பை குற்றப்பிரிவு போலீசார் சம்மன்

0 3415

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீதான ஆபாச பட வழக்கு தொடர்பாக, நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு மும்பை குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆபாச படங்கள் தயாரித்து ஆப்கள் மூலம் விநியோகித்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்திருந்த நடிகை ஷெர்லின்சோப்ரா, ராஜ்குந்த்ரா தொடர்புடைய நிறுவனத்தில் ஆபாச படங்கள் எடுக்கப்படும் முறை குறித்து போலீசாரிடம் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை குற்றப்பிரிவு போலீசார் ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதனடிப்படையில், ஷெர்லின் சோப்ரா விசாரணைக்கு ஆஜராக உள்ளார். வரும் 10ஆம் தேதி ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments