மேற்கு வங்க மழை-வெள்ளம் காரணமாக 3 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்திருப்பதாக தகவல்
மேற்கு வங்கத்தில் ஏழு மாவட்டங்களில் மழை-வெள்ளம் காரணமாக 3 லட்சம் பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 4 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தன.திடீரென அணைகளில் இருந்து நீர் திறந்து விட்டதே செயற்கையான வெள்ளப்பெருக்கு உருவாகக் காரணம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியிடம் புகார் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த டி.வி.சி அதிகாரிகள் மாநில அரசின் ஒப்புதலுடன் தான் தண்ணீர் திறக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்
Comments