வங்கிக் காசோலை விதிகளில் திருத்தம் அமலுக்கு வந்தது..! காசோலை கொடுத்தால் விடுமுறை நாட்களிலும் கிளியரிங்
வங்கிக் காசோலைகள் விநியோகிக்கும் போது வங்கியில் பணம் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை வசதி கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் எனும் வசதி, இந்த மாதத்திலிருந்து 24 மணி நேரமும் செயல்படும்.
விடுமுறை நாளாக இருந்தாலும் கூட செக் கிளியரிங் செய்யப்படும் என்பதால், காசோலை வழங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், காசோலை பவுன்சானால் அபராதத் தொகையை செலுத்த நேரிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Comments