பேனரில் இந்திராகாந்தி புகைப்படத்தை வைக்கவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு - 3 பேர் காயம்

0 3730

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கைகலப்பு உருவானது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜர் தலைமையில், புதிய நிர்வாகிகளின் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர், கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இந்திரா காந்தி படத்தை இடம்பெறச் செய்யவில்லை எனக் கூறியும், மூத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறியும் தர்ணாவில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர்.

வாக்குவாதம் மோதலாக மூண்ட நிலையில், இருதரப்பினர் இடையே கைகலப்பு உருவானது. இதில், முன்னாள் நிர்வாகிகள் 3 பேரும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments