புதுக்கோட்டையில் ஆபாச படம் பார்த்ததாக கூறி பள்ளி மாணவனிடம் பணம் பறித்த இருவர் கைது

0 4018
புதுக்கோட்டையில் ஆபாச படம் பார்த்ததாக கூறி பள்ளி மாணவனிடம் பணம் பறித்த இருவர் கைது

புதுக்கோட்டையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பள்ளி மாணவனிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சைபர் கிரைம் போலீஸ் பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டதோடு, சட்டவிரோதமாக ஆபாச படம் பார்த்ததாக கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பயந்து போன மாணவனும், பெற்றோரிடம் ஏதேதோ காரணங்களைக் கூறி 20ஆயிரம் ரூபாய் பணம் பெற்று கூகுள் பே மூலம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, மாணவனின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்ததால் குடும்பத்தினர் விசாரித்த போது நடந்தவை தெரியவந்துள்ளது. பணம் அனுப்பிய கூகுள் பே எண்ணை வைத்து போலீசார் விசாரித்தில், மர்ம நபர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணேசன், பிரகாஷ் என்பதும், இதேபாணியில் பல சிறுவர்கள், கல்லூரி மாணவர்களிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments