தமிழகத்தில் மேலும் 1,997 பேருக்கு கொரோனா உறுதி

0 4174

தமிழகத்தில் புதிதாக 1997 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிக அளவாகக் கோவை மாவட்டத்தில் 220 பேரும், சென்னை மாவட்டத்தில் 196 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 161 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1943 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனால்  சிகிச்சையிலும் வீட்டுத் தனிமையிலும் உள்ள கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 138 ஆகும். கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 33 பேர் உயிரிழந்தனர்.

ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 797 மாதிரிகளைச் சோதனை செய்ததில் 1997 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்றுப் பாதிப்பு விகிதம் ஒன்று புள்ளி 2 விழுக்காடாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments