கோவில் யானைகளை இயற்கையான இடத்தில் பராமரிக்கலாம் ; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

0 2441
கோவில் யானைகளை இயற்கையான இடத்தில் பராமரிக்கலாம்

கோவில் யானைகளை, இயற்கையான, பசுமையான இடத்தில் பராமரிக்கலாம் எனவும், விழாக்காலங்களில் மட்டும் கோவிலுக்கு அழைத்து வராலாம் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மதத்தின் பெயரால் 2000 சதுர அடி அளவிலான கான்கிரீட் தளத்தில் யானைகளை பராமரிப்பதற்கு பதிலாக, இயற்கையான வனப்பகுதியில் பராமரிக்கலாமே என நீதிபதிகள் தெரிவித்தனர்.சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது என்றும், யானைகளின் நலன உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் தலைமை வனப்பாதுகாவலருக்கு அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments