நிதி நிறுவன மோசடி- தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது

0 4014
நிதி நிறுவன மோசடி- தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் புதுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டனர்.

எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நடத்தி வந்த விக்டரி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்காக திருப்பி தரப்படும் என கூறி பலரிடம் பணம் வசூலித்து 600 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாய் தம்பதி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், நிறுவன ஊழியர்கள், எம்.ஆர் கணேஷின் மனைவியை கைது செய்ததோடு, தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன்-ஐ தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments