வெளிநாடுகளில் இருந்து இந்திய பாரம்பரிய பொருட்களில் 75 சதவீத தொல்பொருட்கள் மீட்பு
இந்தியாவில் இருந்து திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட பாரம்பரிய பொருட்களில், 75 சதவீதத்திற்கும் அதிகமானவை கடந்த 7 ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 1976 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 54 தொல் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும 41 பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்கான பெருமை பிரதமர் மோடியை சேரும் என்றும் தெரிவித்தார்.
Comments