புனையப்பட்ட மீடியா என்ற அடையாளத்துடன் வரும் டுவிட்டர் பதிவுகள் அரசின் புதிய ஐடி விதிகளின் கட்டுப்பாட்டில் வராது - மத்திய அரசு
சில பதிவுகளின் மீது புனையப்பட்ட தகவல் என டுவிட்டர் நிறுவனம் அடையாளப்படுத்துவது அரசின் புதிய ஐ.டி.விதிகளின் கட்டுப்பாட்டு வரம்புகளில் வராது என்றாலும், அப்படி செய்வது இயற்கை நீதி கொள்கைக்கு எதிரானது என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
எழுத்துபூர்வமான பதில் ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இது குறித்து டுவிட்டர் நிர்வாகத்திற்கு தமது அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இப்படி அடையாளப்படுத்தி பதிவுகளை வெளியிடும் போது வெளிப்படைத் தன்மையுடனும், அனைவருக்கும் பொதுவாகவும் நடந்து கொள்ளுமாறு டுவிட்டர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
Comments