2022 இறுதிக்குள் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோசுகள் உற்பத்தி செய்ய முடிவு - அமெரிக்க அதிபரின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி
குவாட் நாடுகள் ஒன்றிணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நூறு கோடி தடுப்பூசி டோசுகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளன என அமெரிக்க அதிபரின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த மார்ச் மாதம் குவாட் தலைவர்கள் முதன்முறையாக காணொலியில் சந்தித்து,நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்தனர்.
எந்த நிபந்தனையும் இன்றி உலகம் முழுவதும் தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு அவற்றை வழங்கவும் அப்போது முடிவு செய்யப்பட்டது. அதற்கான உற்பத்தி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்குத் தேவையான நிதி, போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்டவற்றை இதர 3 நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Comments