பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் கும்பல் ; அடையாளம் தெரியாத பெண்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
பேஸ்புக் மூலம் ஆண்களுக்கு நட்பு வலை வீசி நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து, அதைப் பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 20லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
நன்றாக படித்து நல்ல ஊதியத்துடன் இருப்பவர்களை குறிவைக்கும் இந்த கும்பல், முதலில் நட்பாக பழகி, பின்னர் காதலிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி எதிர் தரப்பில் இருப்பவரையும் நிர்வாணமாக பேச வைத்து வீடியோவாக பதிவு செய்துக் கொள்கின்றனர்.
பின்னர் இந்த வீடியோவை உறவினர்கள், குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம் எனக் கூறி சிறுக, சிறுக பணம் பறிக்கின்றனர். கல்லூரி மாணவர், மருத்துவ மேற்படிப்பு மாணவர் என இவர்களது மோசடி வலையில் வீழ்ந்த ஆண்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போவதாக கூறும் போலீசார், அடையாளம் தெரியாத பெண்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.
Comments