தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட உள்ளது இ - பட்ஜெட்

0 4292

தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக நிதிநிலை அறிக்கை இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆகஸ்டு 13ஆம் நாள் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இ- பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டுக் கலைவாணர் அரங்கத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மேசையிலும் கணினித் திரை வைக்கும் பணி முடிவடைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல், துறைவாரியான மானியக் கோரிக்கைகளின் போது புத்தகமாக அச்சிட்டு அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது.

  இதைத் தவிர்க்க இ-பட்ஜெட் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இ-பட்ஜெட்டை எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கான பயிற்சி, கலைவாணர் அரங்கில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments