அண்ணா தொழிற்சங்க தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!
அண்ணா தொழிற்சங்க தேர்தல் வருகிற 14-ம் தேதி முதல் அடுத்த மாதம் 17-ம் தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துகழக மண்டலங்கள், பணிமனைகளில் அண்ணா தொழிற்சங்க பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14, 22, 29 ஆகிய தேதிகளிலும், செப்டம்பர் 7, 17-ம் தேதிகளிலும் 5 கட்டமாக அண்ணா தொழிற் சங்க தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments