ஒலிம்பிக் பதக்கம் வென்றால் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு வீடு: குஜராத்தின் பிரபல வைர வியாபாரி அறிவிப்பு

0 3764

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பதக்கம் வென்று வந்தால் அவர்களுக்கு வீடு கட்ட பணம், வீடு இருப்பவர்களுக்கு கார் வழங்க உள்ளதாக குஜராத்தின் பிரபல வைர வியாபாரி ஸாவ்ஜி தொலாக்கியா தெரிவித்துள்ளார்.

தனது ஊழியர்களுக்கு வீடு, கார் போன்ற பரிசுகள் வழங்கி பிரபலமானவர் தொலாக்கியா. தற்போது ஒலிம்பிக்கில் விளையாடி வரும் இந்திய மகளிர் ஆக்கி அணி, பதக்கத்துடன் நாடு திரும்பினால், அவர்கள் வீடு கட்ட தலா 11 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வீடு இருக்கும் வீராங்கனைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டனை எதிர்கொள்கிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments