இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்: புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே தீர்மானிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு சதவீதத்தை அமல்படுத்த முடியும்.
இதற்கான மசோதா நடப்பு நாடாளுமன்றத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டதாக புகார் எழுந்த நிலையில் மாநில அரசுகளுக்கே இட ஒதுக்கீட்டுக்கான அதிகாரத்தைத் தரும்வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
Comments