ரயிலை நிறுத்தி கேட்டைத் திறந்து, மூடும் ரயில்வே ஊழியர்கள்; பயணத்தில் தாமதம் ஏற்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு
திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகள் சிலவற்றில் கேட் கீப்பர் இல்லாததால், ரயில்வே ஊழியரே ரயிலை நிறுத்தி, இறங்கி வந்து கேட்டை திறந்து மூடிச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ரயில்வே கேட்டுகளில் கேட் கீப்பர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. கேட் கீப்பர் இல்லாத ரயில்வே கேட்டுகள் ஒவ்வொன்றிலும் ரயிலை நிறுத்தி, முன்பக்க எஞ்சினில் இருக்கும் ஊழியரே இறங்கி வந்து கேட்டை மூடுகிறார். பிறகு ரயிலை சிறிது தூரம் நகர்த்திச் சென்று மீண்டும் நிறுத்தி, பின்பக்க எஞ்சின் ஊழியர் இறங்கி வந்து கேட்டை திறந்து விடுகிறார். இதனால் பயணத்தில் பல மணி நேர தாமதம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Comments