சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரெனத் தீப்பிடித்து எரிந்த டாட்டா சுமோ

0 2878

ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டாட்டா சுமோ வாகனம் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

அதில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் அந்த வாகனம் முழுவதும் எரிந்து கூடானது.

இஞ்சினில் மின் கசிவால் தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் இது குறித்துப் பஞ்சகட்டா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments