சைபர் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள் தேவை-குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
இந்திய தேசம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது என்றும் சைபர் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள் தேவைபடுகிறது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார்.
நிகழ்வில் பேசிய குடியரசுத் தலைவர், 21-ஆம் நூற்றாண்டு சமூகம் அறிவுசார் சமூகமாக உள்ளது என்றும் அதுவே நமது நாட்டின் உண்மையான பலமாகும் என்றும் தெரிவித்தார்.
Comments