தென் சீன கடலுக்கு போர் கப்பல்களை அனுப்புகிறது இந்தியா
தென் சீனக்கடலில் ஆதிக்கம் செலுத்த முயலும் சீனாவின் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர்க்கப்பல் அணி ஒன்றை இந்திய கடற்படை அங்கு அனுப்ப உள்ளது.
ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஒரு நாசகாரி கப்பல், ஏவுகணை வீசும் ஒரு கப்பல் உள்ளிட்ட 4 போர்க்கப்பல்கள் தென் சீனக்கடலிலும், மேற்கு பசிபிக் கடற் பிராந்தியத்திலும் 2 மாத காலம் ரோந்துப் பணிகளுக்கு அனுப்ப உள்ளதாக அறிக்கை ஒன்றில் கடற்படை தெரிவித்துள்ளது.
பிராந்திய அளவில் சீனாவுக்கு எதிரான போர்தந்திர நடவடிக்கைகளில் இந்தியா பெரிய பங்கை ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.தென் சீன கடற்பகுதியில் உள்ள நட்பு நாடுகளுடனான உறவை உறுதி செய்து, அங்கு கடற்வழி போக்குவரத்து தடையின்றி நடக்கவும் இது உதவும் என கூறப்படுகிறது.
Comments