சினிமா படப்பிடிப்புக்கு செட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் தீவிபத்து

0 3563

சென்னை மதுரவாயலில் சினிமா படப்பிடிப்புக்கு செட் அமைக்க பொருட்கள் வாடகைக்கு விடும் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் வானகரம் சர்வீஸ் சாலையில் உள்ள FILM DECORS என்ற நிறுவனத்தின் குடோனில் செட் அமைக்க தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் தீப்பரவிய நிலையில், அங்கிருந்து அதிகளவில் புகை வெளியேறியது.

இதனையறிந்த பொதுமக்கள் அங்கு வேடிக்கை பார்க்க குவிந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் எனும் ராட்சத தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments