கர்நாடகத்தில் 29 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்பு

0 2216
கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான புதிய அமைச்சரவையில் 29 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான புதிய அமைச்சரவையில் 29 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதும் ஜூலை 28ஆம் நாள் புதிய முதலமைச்சராகப் பசவராஜ் பொம்மை பதவியேற்றார். இந்நிலையில் இன்று பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அமைச்சர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

லிங்காயத்துக்களுக்கு 8,ஒக்கலிகர்களுக்கு 7, பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 7 என அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டதாக பசவராஜ் பொம்மை தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. இதே போல் துணை முதலமைச்சர்களும் நியமிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments