96 தனியார் மருத்துவமனைகள் மீது கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் என புகார்-சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து தமிழகத்திற்கு இம்மாதத்திற்கு சுமார் 75லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுநீரக சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த அவர், தமிழகத்தில் தற்போது 13 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருவதின் பேரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்றார். மேலும்,கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக 96 தனியார் மருத்துவமனைகள் மீது புகார் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments