ஆண்கள் மல்யுத்தம்- இந்தியாவுக்கு தொட்டு விடும் தூரத்தில் தங்கம்!

0 16690

லிம்பிக் மல்யுத்த போட்டியில்  ரவி குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவுக்கு கிடைக்கப் போவது தங்கமா, வெள்ளியா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தப்போட்டி 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவி குமார் தாஹியா, கஸகிஸ்தானின் நூரிசலாம் சனாயெவ்வை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இந்தியாவுக்கு குறைந்தது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியானாலும், ரவி குமார் தாஹியா வியாழக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை அணிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் நாடே உள்ளது.

முன்னதாக நடந்த காலிறுதிப் போட்டியில் பல்கேரியாவின் ஜார்ஜி வாலன்டினோவை தோற்கடித்து அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். இதனிடையே 86 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த  காலிறுதிப் போட்டியில் சீனாவின் சூஷென் லின்னை 6 க்கு 3 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய வீரர் தீபக் புனியா,  அரை இறுதியில் அமெரிக்காவின் டோவிட் மோரிசிடம் தோல்வி அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments