ஒன்றாக மது அருந்த சென்ற போது இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு... மது பாட்டிலால் முகத்தில் ஓங்கி அடித்த இளைஞர்
கள்ளக்குறிச்சி அருகே கடையில் இருந்து வாங்கிச் சென்ற பீர்பாட்டில்கள் யாருடையது என இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் பீர் பாட்டிலால் மற்றாரு இளைஞரை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
புக்கிரவாரி புதூரை சேர்ந்த ராஜா என்பவர், நேற்று மது அருந்துவதற்காக அருகேவுள்ள மதுக்கடைக்கு சென்றபோது, அங்கு வந்த கட்டிட பொறியாளர் கோகுல் ஏற்கனவே மதுபோதையில் இருந்த நிலையில், இருவரும், பீர் பாட்டில்களை வாங்கி மது அருந்த சென்றுள்ளனர். அப்போது, கையில் வைத்திருந்த பீர் பாட்டில் யாருடையது? என்ற குழப்பத்தில், சாலையின் நடுவே வைத்து தகராறு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ராஜா கையில் வைத்திருந்த ஒரு பீர் பாட்டிலை தரையில் போட்டு உடைத்துவிட,கோகுல் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ராஜாவின் முகத்தில் ஓங்கி அடித்ததில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து ராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில், பரவி வருகிறது.
Comments