”ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழக அரசு பெரிதும் உறுதுணையாக இருந்தது” -தமிழக வீராங்கனை பவானி தேவி

0 6401

லிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழக அரசு பெரிதும் உறுதுணையாக இருந்ததாக இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பின் தமிழகம் திரும்பிய பவானி தேவி, சென்னை தலைமைச் செயகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னையும், தன் தாயாரையும் முதலமைச்சர் பாராட்டியது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும், முதலமைச்சருக்கு நினைவு பரிசாக தனது வாளை பரிசளித்த போது, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தேவைப்படும் என அதனை அவர் திருப்பி தனக்கே பரிசாக அளித்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments